திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒளி விழா நிகழ்வானது, மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி தலைமையில், நேற்று வியாழக்கிழமை மாவட்ட செயலக புதிய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது.

மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் அனைத்து மதங்களையும் சேர்ந்த உத்தியோகத்தர்கள் அந்தந்த மதங்களின் விசேட நிகழ்வுகளை எவ்வித வேறுபாடுமின்றி ஒற்றுமையுடனும் சிறப்பாகவும் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

இதன் போது,  சிறுவர் சிறுமிகளின் கலை நிகழ்வுகளும் மேடையை அலங்கரித்தன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்ச்சிகளை சிறப்பாக வழங்கிய சிறுவர் சிறுமிகளுக்கு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளினால் நத்தார் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.சுதாகரன், மாவட்ட செயலக பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் என பலரும் கலந்து கொண்டனர்.