ஓரின சேர்க்கைக்கு அழைப்பு : ஆவலுடன் சென்ற மாணவனுக்கு அரங்கேறிய கொடுமை

இந்தியாவில் பொறியியல் மாணவர் ஒருவரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து நிர்வாணப்படுத்தி பணம் மற்றும் கைபேசியை பறித்துக்கொண்டு மாணவனை தாக்கிச் சென்ற 4 பேர் கொண்ட கும்பலுக்கு பொலிஸார் வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 21 வயதான   மாணவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி இருந்து ஒரு பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்த மாணவர் ஓரின சேர்க்கையாளர்களுக்கான செயலி ஒன்றில் அடிக்கடி தகவல் பகிர்ந்து வந்துள்ளார்.

இந்த செயலியில் அறிமுகமான வாலிபர் ஒருவர் ஓரின சேர்க்கையில் ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.

இதனையடுத்து மாணவர் சரவணம்பட்டி பூந்தோட்டம் நகர் பகுதியில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு சென்றுள்ளார்.

அங்கு வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவருடன் மாணவர் பேசிக் கொண்டிருந்தபோது திடீரென மேலும் 3 பேர் அங்கு வந்துள்ளனர்.

நால்வரும் மாணவரை தாக்கி ஆடைகளை கழற்றி நிர்வாண படுத்தி கொடுமைபடுத்தியதாகக் கூறப்படுகிறது.

பின்னர் மாணவரின் கைபேசியை பறித்த கும்பல் மாணவனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.11 ஆயிரத்தை தங்கள் கணக்கிற்கு மாற்றம் செய்துள்ளனர்.

இதனையடுத்து அந்த 4 பேரும் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.‌

தாக்குதலில் உடல் மற்றும் தலையில் பலத்த காயம் அடைந்த மாணவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்தார்.

மாணவர் இது குறித்து சரவணம்பட்டி பொலிஸாரிடம் புகார் அளித்தன் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.