புலமைப் பரிசில் பரீட்சையில் தம்பலகாமம் கோட்டத்தில் அதி கூடிய புள்ளிகளை பெற்ற மாணவனுக்கு கௌரவிப்பு

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை- தம்பலகாமம் கோட்டத்தில் ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு பாரதிபுரம் பராசக்தி வித்தியாலயத்தில் இன்று புதன்கிழமை பாடசாலையின் அதிபர் ஜெயசித்ரா தலைமையில் இடம் பெற்றது.

திருகோணமலை மாவட்ட நலன் புரிச் சங்கத்தினால் மாவட்டத்திலுள்ள ஐம்பது பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஞானோதயம் என்ற புலமைப் பரிசில் வழிகாட்டி நூல் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.

இதன் போது பரீட்சையில் தோற்றவிருக்கின்ற மாணவர்கள் 180 ற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றால் பரிசாக  பத்தாயிரம் ரூபாய் வழங்குவதாக இதன் போது தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தம்பலகாமம் பாரதிபுரம் பராசக்தி வித்யாலயத்தில் கல்வி பயிலும் வீ.டிசனிகன் 182 புள்ளிகளைப் பெற்று தம்பலகாமம் கோட்ட மட்டத்தில் முதலாவது இடத்தையும் மாவட்டத்தில் ஆறாவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதனையடுத்து குறித்த மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் தலைமையில் இடம்பெற்ற போது குறித்த மாணவனுக்கு 10 ஆயிரம் ரூபாய் பண பரிசிலும் கற்றல் நடவடிக்கைகளுக்குரிய அனைத்து உபகரணங்களும் திருகோணமலை மாவட்ட நலன்புரிச் சங்கத்தின் தலைவர் எஸ்.குகதாஸனினால் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தம்பலகாமம் கோட்ட கல்வி அதிகாரி ராஜ சுரேஷ் ஓய்வு பெற்ற அதிபர் வீ.மகேஸ்வரன் மற்றும் தமிழகமும் பிரதேச சபையின் துணை தவிசாளர் விஜயகுமார், அன்பே சிவம் அமைப்பின் உறுப்பினர் குகன் , பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.