வடமாகாண தென்னை முக்கோண வலய செயற்திட்ட கலந்துரையாடல்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி மாவட்ட பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தென்னை பயிர்ச்செய்கை சபையின் ஏற்பாட்டில் வடமாகாண் தென்னை முக்கோண வலய செயற்திட்டம் ஒன்று இன்று புதன்கிழமை காலை 09.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

குறித்த நிகழ்வில் பளை பிரதேச கள உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்

.குறித்த நிகழ்வில் தென்னை பயிர் செய்கை அதிகளவில் மேற்கொள்ள எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பாக காட்சிபடுத்தப்பட்டு கள உத்தியோகத்தர்களிடம் அதற்கான தீர்வுகளும் கேட்டறியப்பட்டது.

வடமாகாணத்தில் இராணுவத்தினரிடமும்,வனஜீவராசிகள் திணைக்களம்,மற்றும் தரிசு நிலங்கள் உள்ளடங்களாக ஏறத்தாழ 40000ம் ஏக்கர் காணிகள் உள்ளன எனவும் குறித்த காணிகளை தென்னை பயிர்ச்செய்கைக்காக விடுவித்தால் 66.35மில்லியன் தேங்காய்கள் வழங்க முடியும் எனவும் 5828மில்லியன் ரூபாய் தேசிய வருமானமாக பெறலாம் எனவும் அதிக இலாபம் ஈட்டலாம் எனவும் தனது கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன