தாகம் என்று தண்ணீர் குடித்த இளைஞன் உயிரிழப்பு

இந்தியாவில் தேனீ விழுந்த தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியை சேர்ந்த ஹிரேந்திரா சிங் (22 வயது) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த 6 ஆம் திகதி இரவு வீட்டில் டம்ளரில் இருந்த தண்ணீரை குறித்த இளைஞன் குடித்துள்ளார். தண்ணீரை குடித்த சிறிது நேரத்திலேயே அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது.

அவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இவர் குடித்த தண்ணீரில் தேனீ ஒன்று கிடந்துள்ளது. அந்த தேனீயானது அவரது உணவு குழாய்க்குள் சென்று கடித்துள்ளது. அதனால் அவருக்கு நெஞ்சு எரிய ஆரம்பித்துள்ளது என மருத்துவ பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.

பின்னர் அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செவ்வப்பட்டார்

சிகிச்சை பலனில்லாமல் கடந்த 7ம் திகதி அதிகாலையில் அவர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் அப்பகுதி காவல் ஆய்வாளார் நரேந்திரா குலஸ்தேதெரிவிக்கையில்,  குறித்த இளைஞன் சிகிச்சையின் போது வாந்தி எடுத்ததில் தேனீ வெளியில் வந்துவிட்டது எனினும் இளைஞன் உயிரிழந்து விட்டார், என தெரிவித்துள்ளார்.