
கொக்கட்டிச்சோலை நிருபர் -சி.கண்ணன்-
மட்டக்களப்பில் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட விச்சிகால பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் கொக்கட்டிச்சோலை பண்டாரிவெளியைச் சேர்ந்த லிங்கம் (வயது46) என்பவரே உயிரிழந்துள்ளார்.
3 பிள்ளைகளின் தந்தையான இவர் மாடு மேற்ப்பதற்காக நேற்று பகல் சென்ற நிலையில் , சடலம் இன்று சனிக்கிழமை காலை 11 மணியளவில் கட்டுப்பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

