உயர்தர மாணவிகளுக்கு பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு

க.பொ.த உயர்தரம் – 2023/2025 கல்வி ஆண்டுக்கான புதிய மாணவிகளை இணைத்துக்கொள்வதற்கான உத்தியோகபூர்வமாக விண்ணப்பம் வழங்கலும், பாட தெரிவு தொடர்பான விழிப்பூட்டும் செயலமர்வு கல்லூரியின் அதிபர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் தலைமையில் கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி (தேசிய பாடசாலை) கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அதிபரின் ஆசிச்செய்தி வாழ்த்துக்களுடன் ஒழுக்க விழுமியங்கள்இ பல்கலைக்கழக பிரவேசம் உள்ளடங்களாக ஆரம்பமான செயலமர்வில் பிரதி அதிபரினால் (நிர்வாகம்) மாணவர் அனுமதி, இலங்கை கல்வி அமைச்சு சுற்றுநிருபம், நிர்வாக கட்டமைப்புகள் தொடர்பான விடயங்கள் தெளிவுபடுத்தப்பட்டது.

உயர்தர பிரிவின் கற்கை நெறிகளான உயிரியல் பெளதீக விஞ்ஞானம், உயிரியல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் கலை ஆகிய பிரிவுகளின் பகுதித்தலைவர்கள், உப பகுதித்தலைவர்கள் ஆகியோர்களினால் பாட தெரிவுகள், பல்கலைக்கழக வெட்டுப்புள்ளி, கடந்த கால உயர் தர பெறுபேறுகளின் புள்ளிவிபரவியல், க.பொ.த (சா/த) பெறுபேறுகள் முக்கியத்துவம், உயர்தர அடிப்படை தகைமைகள் மற்றும் பல தலைப்புக்களில் மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

 

இந்நிகழ்வில் பிரதி அதிபர்களான ஹாஜியானி எஸ்.எஸ்.எம். சமதா மசூது லெவ்வை, ஏ.எச் நதிரா, உதவி அதிபர் என்.டி நதீகா, உயர்தர பிரிவு பகுதித்தலைவர்கள்,  கற்பிக்கும் ஆசிரியர்கள், மாணவிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.