
வலி.வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா
-யாழ் நிருபர்-
வலி வடக்கு பிரதேச செயலகமும், பிரதேச கலாசார பேரவையும் இணைந்து நடாத்தும் பண்பாட்டு பெருவிழா நேற்று வெள்ளிக்கிழமை பி.ப 2.00 மணிக்கு தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் ஆரம்பமாகி நடைபெற்றது.
வலி.வடக்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவிற்கு, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் பிரதம விருந்தினராகவும் , வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் லாகினி நிருபராஜ் சிறப்பு விருந்தினரகாவும், யூனியன் கல்லூரி அதிபர் திரு தில்லையம்பலம் வரதன் கௌரவ விருந்தினரகாவும் கலந்து சிறப்பித்தனர்.
வலி வடக்கு பிரதேசத்தினை சார்ந்த பல கலைஞர்களின் திறமைகள் இவ் நிகழ்வில் அரங்கேற்றப்படதுடன், பல துறைகளில் மிளிர்ந்த கலைஞர்கள் கௌரவிப்பும் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.








