
மரண வீட்டிற்கு சென்றவர் சடலமாக வீடு திரும்பிய சோகம்
மரண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் மரண வீடொன்றிற்கு சென்று வீடு திரும்பிய வேளையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சீதுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
