
𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட திறன் விருத்தி தொடர்பான செயலமர்வு
அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு ஸ்பாண்ட் ( 𝗦𝗣𝗔𝗡𝗗 ) அமைப்பினர் மாணவர்களின் மேம்பாட்டிற்காக பல்வேறுபட்ட நிகழ்வுகளினை முன்னெடுத்து வருகின்றனர்.
அந்தவகையில் நேற்று திங்கட்கிழமை மென் திறன் விருத்தி தொடர்பான ஒரு செயலமர்வினை நாவிதன்வெளி கிராமத்தில் கமு/சது/நாவிதன்வெளி அன்னமலை மகாவித்தியாலயத்தில் நடாத்தப்பட்டது
“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 9 – 13 மாணவர்களுக்கும் “சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி” (Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சி முன்னெடுக்கப்பட்டது.
பயிற்சியாளர், கற்றல் மற்றும் மேம்பாட்டு ஆலோசகர், KTP ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவன நிறுவுநர் K.T..பிரஷாந்தனால் இந்த பயிற்சி வழங்கப்பட்டது.
நிகழ்வில் அமைப்பின் தலைவர் திரு.ராஜன் சுவோஜன், மூத்த உறுப்பினர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிங்கள பாடநெறி விரிவுரையாளர் திருமதி.சு.சந்திரகுமாரி, திரு கஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.




மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

