
இடைக்கால நிர்வாகக் குழுவுக்கெதிரான மனு மீண்டும் ஒத்திவைப்பு
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காக இடைக்கால நிர்வாகக் குழுவொன்று நியமிக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை, எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை மேன்முறையீட்டு நீதிமன்றம் மீண்டும் ஒத்திவைத்துள்ளது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் டி.என். சமரகோன் ஆகியோரடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் முன்னிலையில் இன்று செவ்வாய்க்கிழமை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குறித்த மனு, நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மேலதிக பரிசீலனை இன்றைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு இடைக்கால குழுவை நியமித்து முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் அடுத்த வழக்கு தவணை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப் போவதில்லை என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு உறுதியளித்துள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
