பசறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

-பதுளை நிருபர்-

பசறை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.

பசறை நகரிலிருந்து லுணுகல நோக்கி வீதியில் பயணித்த பொலேரோ ரக லொறி ஒன்று வீதியின் குறுக்கே செல்ல  முற்பட்ட நபர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பசறையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் மவுசாகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்