மட்டக்களப்பில் மலையகம் 200 ஓவிய கண்காட்சி

மட்டக்களப்பில் YMCA மண்டபத்தில் இன்று சனிக்கிழமை காலை 10 மணிக்கு “மலையகம் 200 ஓவிய கண்காட்சி”  விம்பம் நிறுவனத்தின் தலைமையில் இடம் பெற்றது .
 
ஓவிய கண்காட்சியின் கருப்பொருளாக மலையக மக்களின் “வலியும் வாழ்வும்” என்பது அமைந்திருந்தது .

கண்காட்சியில் நூல் வெளியீடு அறிமுகம், கலந்துரையாடல், போன்ற நிகழ்வுகள் இடம் பெற்றது.

இதனைத் தொடர்ந்து சிறுகதை, ஓவியம், கட்டுரை ப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும், நினைவுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

இங்கு காட்சிப்படுத்தப்பட்ட ஓவியங்கள் மலையக மக்களின் சமூக,  பொருளாதார, வாழ்வியல், கலாசார பிரச்சினைகள் போன்றவற்றை வெளிக்கொணரும் முகமாக காட்சிப்படுத்தப்பட்டது.

ஓவிய கண்காட்சியானது இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை இடம் பெற உள்ளது.