மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட நீதி அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற மத்தியஸ்த சபை ஆணைக்குழுவின் மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை பிரதேச செயலக கட்டடத்தில் இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் வழிகாட்டலில் உதவி பிரதேச செயலாளர் திருமதி சத்யகெளரி தரணிதரன் ஆலோசனைக்கமைய நிருவாக உத்தியோகத்தர் வே. தவேந்திரன் உட்பட இலங்கை நீதி அமைச்சின் பொறியியலாளர் கஜானன் மத்தியஸ்த சபையின் மாவட்ட பயிற்றுவிப்பாளர் எம்.ஐ.எம். ஆஸாத் ஆகியோர் மத்தியஸ்த சபைக்கான புதிய அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான நேர்முகப்பரீட்சையில் கலந்து கொண்டிருந்ததுடன் மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் தனது ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்.

இந் நேர்முகப்பரீட்சைக்கு பட்டதாரிகள் மற்றும் சமூக மட்டங்களில் சேவையாற்றுவோர் விண்ணப்பித்திருந்தனர்.

குறித்த நேர்முக தேர்விற்கு சுமார் 80 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதுடன் இதில் சித்தியடைவோரில் இருந்து தவிசாளர் உப தவிசாளர் ஆகியோர் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு பொதுமக்களுக்கு வசதியான பிணக்கு முறைப்பாடு ஏற்றுக்கொள்ளும் முறையை அறிமுகப்படுத்துகிறமை சுட்டிக்காட்டத்தக்கது.