
04 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு
04 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச குறைத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 06 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 222 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் சிவப்பரிசி 03 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 169 ரூபாவாகும்.
அத்துடன் ஒரு கிலோகிராம் கொண்டைக்கடலை 06 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இதன் புதிய விலை 549 ரூபாவாகும்.
ஒரு கிலோகிராம் பருப்பு 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய விலை 295 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
