வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று புதன்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று குறைந்துள்ளது.
மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 320.91 ஆகவும் மற்றும் விற்பனை விகிதம் ரூ.333.18 ஆகவும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி ரூ. 319.50 ஆகவும் மற்றும் விற்பனை பெறுமதி ரூ. 330.50 ஆகவும் பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ. 321 முதல் ரூ. 322 மற்றும் விற்பனை விகிதம் ரூ. 331 முதல் ரூ. 332. ஆகவும் பதிவாகியுள்ளது.
