திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களின் புத்தக கண்காட்சி

 

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தின் வாசகர் வட்டம் மற்றும் பொது நூலகம் இணைத்து திருகோணமலை மாவட்ட எமுத்தாளர்களின் மாபெரும் புத்தக கண்காட்சி கடந்த சனிக்கிழமை   காலை திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இன்று ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது நாளாகவும் இடம் பெற்றது.

இந்நிகழ்வு, வாசகர் வட்டத்தின் தலைவர் சரவணபஆனந்தம் திருச்செந்தூரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்விற்கு, பிரதம விருந்தினராக திருகோணமலை நகராட்சி மன்றத்தின் செயலாளர் வெ. இராஜசேகர், சிறப்பு விருந்தினராக சனசமூக உத்தியோகத்தர் எஸ். முரளிதரன், கௌரவ விருந்தினராக அன்பு சன சமூக நிலையத்தின் செயலாளர் செ.திருநாவுக்கரசு ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, கண்காட்சி அங்குரார்ப்பணம், கவியரங்கம், நடனம் , பாடல், ஓவிய வரையும் போட்டி உள்ளிட்ட பல்வேறு கலை மற்றும் போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.

‘புதிய சமுதாயம் மலருமா..?’ என்ற தலைப்பில் கவிஞர் யோகானந்தம் தலைமையில் இடம்பெற்ற சிறப்பு கவியரங்கில் திருகோணமலையின் கவிஞர்களான அ.அச்சுதன், தி.பவித்ரன், ச.திருச்செந்தூரன், யு.சுஜந்தினி, சி.ஜெயசிறி, தி.சத்திய பிரியங்கா ஆகியோர் கலந்து கொண்டு கவி பாடியிருந்தனர்.

இந்நிகழ்வில், திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த எழுத்தாளர்களின் நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இங்கு, உள்ளுர் உணவு உற்பத்தி, சுயதொழில் உற்பத்தி கண்காட்சி மற்றும் விற்பனை நிகழ்வும் இடம்பெற்றது.

திருகோணமலையில் முதல் தடவையாக மாவட்ட எமுத்தாளர்களின் கண்காட்சி இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.