திடிரென தீப்பற்றி எரிந்த பாடசாலையில் பொருத்தப்பட்டிருந்த மின்கல மின்மாணி பெட்டி

-பதுளை நிருபர்-

பது/ கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சூரிய மின்கல மின் மாணி பெட்டி நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

குறித்த சூரிய மின்கலம் பொருத்தப்பட்டு சுமார் ஒரு வருடம் கடந்த நிலையில் நேற்று திடீரென தீப்பற்றி எரிவதை மாணவர்கள் அவதானித்துள்ளனர்.

நேற்றைய தினம் விடுமுறை தினமாக இருந்த போதிலும் சரஸ்வதி பூஜை மற்றும் விவேகானந்த பரீட்சையின் காரணமாக ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு வருகை தந்திருந்தனர்.

இதன் போது பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்கள் தீ பற்றி எறிவதை அவதானித்து உடன் கூக்குரல் இட்டு பாடசாலையில் இருந்த ஆசிரியர்களுக்கு தெரிவித்து ஆசிரியர்களின் உதவியுடன் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதனால் ஏற்பட இருந்த பாரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் இது சம்பந்தமாக பசறை பொலிஸாருக்கும் மின்சார சபைக்கும் அறிவிக்கப்பட்டதாகவும் பாடசாலையின் அதிபர் தெரிவித்தார்.

தீப்பற்றியமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

தற்காலிகமாக சூரிய மின்கல மின்மாணி ஒன்று மீண்டும் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாக அதிபர் தெரிவித்தார்.