
மீள்குடியேற்றம் 03 வருடங்களுக்குள் பூர்த்தியாகும் – பிரசன்ன ரணதுங்க
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களின் மீள்குடியேற்றம் அடுத்த மூன்று வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த 2 இலட்சத்து 74 ஆயிரத்து 120 குடும்பங்களைச் சேர்ந்த 9 இலட்சத்து 17 ஆயிரத்து 143 பேர் அந்த மாகாணங்களில் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்
இதன்படி, ஆயிரத்து 701 குடும்பங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 999 பேரே இன்னும் மீள்குடியேற்றப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
