இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

 

இலங்கையில் ஒரு வருடத்தில் 1,135 தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டதாக தொழுநோய் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 175 தொழுநோயாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.

புதிய நோயாளர்களை அடையாளம் காண,  அதிக நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளை வரை படமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.