
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்து : ஒருவர் உயிரிழப்பு
அம்பாறை-பொத்துவில் பகுதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்குநேர் மோதியதால் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.
பொத்துவிலிருந்து அக்கரைப்பற்றுக்கு செல்லும் பிரதான வீதியான ரொட்டை பகுதியில் பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்களே நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் ஹிஜ்ரா நகரைச் சேர்ந்த இருவர் பலத்த காயங்களுக்குள்ளானதுடன் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
