
உந்துருளி விபத்தில் நெதர்லாந்து பிரஜை படுகாயம்
-பதுளை நிருபர்-
எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல வோட்டர்போல் வீதியில் அமைந்துள்ள மவுன்டன் கெவன் விடுதிக்கு அருகாமையில் உந்துருளியில் பயணித்த நெதர்லாந்து பிரஜை ஒருவர் வீதி ஓரமாக இருந்த மரம் ஒன்றில் மோதுண்டு காயமடைந்துள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த நபரை 1990 காவு வண்டியில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் குறித்த நபர் அதிகளவிலான மது போதையில் இருப்பதாகவும் சிறு காயங்களே ஏற்பட்டுள்ளதாகவும் ஆபத்தான நிலையில் இல்லை எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை காலை 5.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
