4 மாத கர்ப்பிணி காதல் மனைவிக்கு கணவனால் நிகழ்ந்த கொடூரம்

இந்தியாவில் போதைக்கு அடிமையான கணவன் தனது கர்ப்பிணி மனைவியை எரித்து கொலை செய்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகர் கோவிந்தாபுரம் பகுதியில் வசித்து வரும் ராஜ்குமார் பெயிண்டராக பணிபுரிந்து வந்தார். இவர் காதலித்து திருமணமாகி 8ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் 6 வயதில் ஒரு மகன் இருப்பதுடன் தற்போது 4 மாதம் கர்ப்பமாக மனைவி இருந்துள்ளார்.

இந்நிலையில், ராஜ்குமார் வேலைக்கு செல்லாமல் போதைக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வந்துள்ளார். இதனால், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் சனிக்கிழமை பகலிலேயே குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் கணவன் மனைவியிடையே தகராறு முற்றியது.

இனி மேல் நீ குடித்துவிட்டு வந்தால் மண்ணெண்ணெயை ஊற்றிக் கொண்டு தற்கொலை செய்து கொள்வேன் என கணவரை மனைவி மிரட்டல் விடுத்தார்.போதையில் இருந்த கணவர் நீ என்ன தற்கொலை செய்து கொள்வது, நானே உன்னை எரித்து விடுகிறேன் என கூறி வீட்டில் இருந்த மண்ணென்ணெயை எடுத்து நந்தினி மேல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார். அத்துடன் மகனை தூக்கி சென்றுள்ளார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்த போது தீக்காயத்தால் துடித்த அவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், நந்தினி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது கணவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.