
நிலத்துக்கு அடியில் கேட்கும் விசித்திர சத்தம் : அச்சத்தில் மக்கள்
கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்மித்த பகுதியில் நிலத்துக்கு அடியிலிருந்து பதிவான சத்தம் தொடர்பில் ஆய்வுகளை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
கொத்மலை – வேத்தலாவ பகுதியில் நிலத்துக்கு அடியிலிருந்து பாரிய சத்தமொன்று கேட்பதாக அந்த பகுதியிலுள்ள மக்கள் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த அவர், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் நுவரெலியா அலுவலகத்தின் அதிகாரிகள் குழுவொன்று குறித்த பகுதிக்கு ஆய்வுகளை முன்னெடுப்பதற்காக சென்றுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
அத்துடன், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய அந்த பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதா? இல்லையா? என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
