பாடசாலை விடுமுறை தொடர்பில் அறிவிப்பு

காலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாண ஆளுநர் கலாநிதி விலி கமகே இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.