
கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்து
-பதுளை நிருபர்-
பண்டாரவளை பதுளை வீதியின் உடுவர பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரவளையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த குறித்த கார் வீதியை விட்டு விலகி பதுலுஓயா ஆற்றில் விழ்ந்து விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்
எவருக்கும் காயங்கள் எற்படவில்லை
காரின் சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையினால் மகிழ்ந்து வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹலிஎல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
