
நாட்டின் பிரதான ஆறுகளில் நீர்மட்டம் அதிகரிப்பு
நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நில்வளா கங்கை, களுகங்கை, கிங் கங்கை, அத்தனுகளு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து காணப்படுவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் நேற்று சனிக்கிழமை வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்த சில பகுதிகளில் தற்போது வெள்ள நிலைமை சற்று குறைவடைந்துள்ளன.
இந்தநிலையில் ஆறுகளை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
