மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலையானது 85 அமெரிக்க டொலர்களுக்கும் குறைவாக பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, டபிள்யூ. ரி. ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 82.79 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 84.50 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.