எல்ல வெல்லவாய வீதியில் விபத்து : ஒருவர் பலி

-பதுளை நிருபர்-

 

எல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்ல வெல்லவாய வீதியில் ராவணல்ல பகுதியில். இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்

எல்ல பக்கம் இருந்து வெல்லவாய பக்கம் சென்ற மூற்சக்கரவண்டியும் வெல்லவாய பக்கம் இருந்து எல்ல பக்கமாக வந்து கொண்டு இருந்த பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்

விபத்தில் மூச்சக்கரவண்டியில் பயணித்த 70 வயதுடைய ஒருவரும் மூற்சக்கரவண்டியின் சாரதியான பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் வெல்லவாய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மூற்சக்கரவண்டியில் பயணித்த 70வயதுடைய நபர் மரணித்ததாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்

மேலதிக விசாரணைகளை எல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்