கணபதிப்பிள்ளை மோகனின் ஏற்பாட்டில் பண்ணையாளர்கள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடு

-வாழைச்சேனை நிருபர்-

மயிலத்தமடு மாதவனை மேய்ச்சற்தரை விவகாரம் தொடர்பில் பண்ணையாளர்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவரும், ரணில் 2024 செயலணித் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை மோகனின் ஏற்பாட்டில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 8ம் திகதி ஜனாதிபதியின் மட்டக்களப்பு விஜயத்தை ஒட்டியதாக மையிலத்தமடு பண்ணையாளர் சங்க தலைவர் சீ.தியாகராசா செயலாளர் பா.பரசுராமன் மனித உரிமைகள் ஆணைக்குழுசட்டத்தரணி பேராசியர் த. ஜெயசிங்கம் அடங்கிய குழுவினர் ஜனாதிபதியைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக க.மோகன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.