சிவில் சமூக செயற்பாட்டாளர் லவக்குமாரின் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை

-வாழைச்சேனை நிருபர்-

வாழைச்சேனை பொலிசார் மற்றும் மட்டக்களப்பு விசேட பொலிஸ் குழவினர் நேற்று புதன்கிழமை  காலை கிரானில் வசிக்கும் சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமாரின் வீட்டுக்கு சென்று விசாரணைகனை மேற்கொண்டனர்.

தமது வீட்டிற்கு வந்த ஆயுதம் தாங்கிய இனம் தெரியாத நபர்கள் தன்னை கொலை அச்சுறுத்தல் விடுத்ததாக தெரிவித்து வாழைச்சேனை பொலிஸ் நிலையம் மற்றும் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கடந்த செவ்வாய் கிழமை நேரில் சென்று முறைப்பாடு தெரிவித்திருந்தார்.

அது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் முகமாக நேற்று புதன்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லசந்தபண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரில் சென்று விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

லவக்குமார் உட்பட அவரது மனைவி மற்றும் பிள்ளையிடம் வாக்கு மூலத்தினை பெற்றதுடன் அருகில் வசிப்பவர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்

அத்துடன் பிரதேசத்தில் பொருத்தப்பட்ட சீ.சீ.ரீவி ஒளிப்பதிவு கருவிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது சிவில் சமூக செயற்பாட்டாளர் கு.வி.லவக்குமார் பின்வருமாறு கருத்து தெரிவித்திருந்தார்.