
மரம் வீதியின் குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயம் : மூன்று முச்சக்கர வண்டிகள் பலத்த சேதம்
-பதுளை நிருபர்-
பதுளையில் லோவர் வீதி சிறைச்சாலைக்கு அருகாமையில் உள்ள பெரிய மரம் ஒன்று வீதியின் குறுக்கே விழுந்ததில் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் மூன்று முச்சக்கர வண்டிகள் பலத்த சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கை மின்சார சபை ஊழியர்கள் வீதியிலுள்ள மின்சார அமைப்பில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென இந்த மரம் வீதியின் குறுக்கே விழுந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர் அனல்மின் நிலைய ஊழியர் எனவும், மரம் முறிந்து வீழ்ந்ததில் பல மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்களும் சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை மாநகர தீயணைப்பு திணைக்களம், பதுளை பொலிஸ் போக்குவரத்து பிரிவு மற்றும் மின் நிலைய ஊழியர்கள் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் வீதியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்


