408 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றல் : 44 ஆயிரம் பேர் கைது

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 408 கிலோ 309 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

44 ஆயிரத்து 208 சந்தர்ப்பங்களில் இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, 44 ஆயிரத்து 241 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த காலப்பகுதியில் 12 கிலோ 995 கிராம் கொக்கெய்ன போதைப்பொருளும் 100 கிலோ 932 கிராம் ஹஷீஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.