தாய்ப்பால் சுரக்கவில்லை என விரக்தியில் தவறான முடிவெடுத்த தாய்

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில் தவறான முடிவெடுத்து தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைச் சேர்ந்த 40 வயதான பெண்ணுக்கு திருமணமாகி எழு ஆண்டுகளின் பின்னர் குழந்தை பிறந்துள்ளது.

அந்தக் குழந்தை பிறந்து 20 நாள்கள் கடந்துள்ள நிலையில்,  தாய்ப்பால் சுரக்கவில்லை என்ற மன அழுத்தத்தில் குறித்த பெண் இருந்துள்ளார்.

இந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தவறான முடிவு எடுத்து உயிரிழந்துள்ளார்.

இறப்பு விசாரணைகளை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி வின்சன் தயான் அன்ரலா மேற்கொண்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.