
சர்வதேச மது ஒழிப்பு தினம் இன்று
சர்வதேச மது ஒழிப்பு தினம் ஒக்டோபர் 03 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகின்றது.
நாட்டில் மதுபான பாவனை காரணமாக, நாளாந்தம் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 20 சதவீதமான பெண்கள் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியல் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரூபி ரூபன் தெரிவித்தார்.
நாட்டில் மதுபான பாவனை வீதம் அதிகரித்துள்ளமை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது எதிர்காலத்தில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய நிலையாகும்.
இதனால் பல நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதுடன், சுகாதாரத்துறைக்கும் பாரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
சிறார்களை இதிலிருந்து பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தேவையுள்ளது.
பிள்ளைகள் தொடர்பில், பெற்றோர்கள் அதிகளவில் கவனம் செலுத்த வேண்டும்.
அத்துடன், மதுபான பாவனைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கு அவர்களுக்கு உரிய சிகிச்சைகளை வழங்க வேண்டும் என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ரூபி ரூபன் தெரிவித்தார்
