
கிழக்கு மாகாண புதிய கல்வி பணிப்பாளர் கடமையை பொறுப்பேற்றார்
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மட்டக்களப்பு வலய கல்விப் பணிப்பாளராக பணியாற்றிய திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தனது கடமைகளை திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னர் மாகாண கல்வி பணிப்பாளராக கடமையாற்றிய திருமதி அகிலா கனகசூரியம் ஓய்வு பெற்றதையடுத்து குறித்த வெற்றிடத்திற்கே இந் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜீ.திசாநாயக்க, வலயக் கல்வி பணிப்பாளர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

