
வட்டக்கச்சி வினோத்தின் ‘வேர்கள் வான் நோக்கின்’ கவிதை நூல் வெளியீட்டுவிழா
-யாழ் நிருபர்-
கிளிநொச்சி வட்டக்கச்சிப் பகுதியில் வசிக்கும் வினோத்தின் “வேர்கள் வான் நோக்கின்” கவிதை நூல்வெளியீட்டு விழா நிகழ்வு கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு நூலின் முதல் பிரதியினை வெளியிட்டுவைத்தார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மத்திய கல்லுரியின் முதல்வர் பூலோகராஜா, பிரதேசசபை முன்னால் உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

