பெற்ற மகளை மிரட்டி கர்ப்பமாக்கிய தந்தை: கருவை கலைத்த தாய்

இந்தியாவில் அரியலூர் மாவட்டம் செந்துறை ராயல் சிட்டி பகுதியில் தந்தை ஒருவர் தனது மகளை மிரட்டி பாலியல் கொடுமை செய்தமையின் காரணத்தால் சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்

லொறியின் சாரதியான சங்கர் (வயது – 37) கடந்த சில மாதங்களுக்கு முன், 12ஆம் வகுப்பு படிக்கும் தனது மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமாகியுள்ளார். இதனையடுத்து மகளின் உடலில் மாற்றங்கள் ஏற்படுவதை கண்ட தாய்க்கு இதுகுறித்து தெரியவந்ததும், விஷயம் வெளியில் தெரியாமல் இருக்க மெடிக்கலில் கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கி கொடுத்துள்ளார்.

இதில் இறந்து பிறந்த ஆண் சிசுவை சாக்கு பையில் சுற்றி வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவிக்கு உதிரப்போக்கு நிற்காததால் அரியலூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவ பரிசோதனையில் மாணவிக்கு கருக்கலைப்பு நடந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்ட 7 மாத சிசுவின் உடல் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் மாணவியின் கொடூர தந்தை, மாத்திரை வாங்கி கொடுத்த தாயார், கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்த மெடிக்கல் உரிமையாளர் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.