
கிண்ணியா மத்திய கல்லூரியின் 65-வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் ஊர்வலம்
கிண்ணியா மத்திய கல்லூரியின் 65 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு நடைபவனி இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 2500 க்கு மேற்பட்ட மாணவர்கள், பழைய மாணவர்கள் பிரமுகர்கள் கிண்ணியா வலயக் கல்வி அதிகாரிகள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்வலமானது கிண்ணியா புகாரியாடி சந்தி ஊடாக சென்று பெரிய பாலத்தின் ஊடாக மீண்டும் கிண்ணியா மத்திய கல்லூரியை சென்றடைந்தது.
1958 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இன்று 65 ஆவது ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடுகின்றது. அதன் முதல் கட்டமாக நடைபவனி இன்று இடம் பெற்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்



