
தேடுதளமான கூகுள் அறிமுகமாகி 25 வருடங்கள்
அதிவேக தொழில்நுட்ப வளர்சடசியடைந்துள்ள காலகட்டத்தில் இணையத்தளத்தில் தவிர்க்க முடியாத தேடுத் தளமாக காணப்படும் கூகுள் இன்று புதன்கிழமை தனது 25வது பிறந்தநாளை கொண்டாடுகின்றது.
கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொண்ட செர்ஜி பிரின் மற்றும் லொரி பேஜ் ஆகியோர் உலகளாவிய தேடுத் தளமொன்றை ஆரம்பிக்கும் நோக்கில், மேற்கொள்ளப்பட்ட முயற்சியானது, கூகுள் தேடுத்தளம் உருவாக வழிவகுத்துள்ளது.
1998ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் திகதி கூகுள் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டு மிக குறுகிய காலத்திலேயே, கணினி உலகில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
அனைத்துவிதமான தேடலுக்கும் கூகுள் இல்லாமல் பயணிப்பது மிகவும் சிரமம் என்ற இடத்திற்கு உலகம் நகர்ந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
