
மன்னார் செஞ்சிலுவை சங்க முன்னாள் தலைவர் அடாவடி
-மன்னார் நிருபர்-
மன்னார் மாவட்டத்தின் இலங்கை செஞ்சிலுவை சங்க பிரதான கிளை தலைமை பதவிக்கு தொடர்ச்சியாக இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் முன்னாள் தலைவரினால் நேற்று திங்கட்கிழமை அலுவலகம் வலுக்கட்டாயமாக பூட்டு போடப்பட்டு மூடப்பட்டுள்ளது.
இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட தலைவராக கடந்த 8 வருடங்களுக்கு மேலாக ஜே.ஜே.கெனடி எனப்படுகின்ற நபர் தலைமை வகித்து வந்த நிலையில் இம் மாதம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்திற்கு எதிராக செயல்பட்டார் என்ற குற்ற சாட்டின் பெயரில் ஒழுக்காற்று நடவடிக்கை ஒன்றுக்காக விசாரணை நடவடிக்கை முடியும் வரை குறித்த தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டிருந்தார்.
அதே நேரம் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தில் உறுப்புரிமையில் இருந்து நிறுத்தப் பட்டிருந்தார். இந்த நிலையில் மன்னார் மாவட்ட கிளையின் தீர்மானத்திற்கு அமைவாகவும், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாப்பின் பிரகாரமும் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மன்னார் மாவட்ட உப தலைவர் தற்காலிக தலைவராக பெயரிடப் பட்டிருந்தார்.
இந்த நிலையில் முன்னாள் தலைவர் குறித்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நான் தான் எப்போதும் தலைவராக செயற்படுவேன் என்றும் அது வரை எந்த செயற்பாடும் அலுவலகத்தில் இடம் பெற கூடாது என்ற அடிப்படையில் அடாவடித்தனமாக கதவுகளுக்கு பூட்டு போட்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இதனால் அலுவலகத்திற்கு சேவைகாக வருகை தந்த ஊழியர்கள்இமற்றும் அங்கு சென்ற பொதுமக்கள் என எவரும் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


