நள்ளிரவில் இடம்பெற்ற கொடூர சம்பவம்

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளம் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணியளவில் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் புஸ்பராசா தினேஸ் (வயது 28) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் சம்பவ இடத்தில் உள்ள நிலையில் கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவ இடத்தை நீதவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குழு முரண்பாடு ஒன்றே இச்சம்பவத்திற்கு காலணம் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர் ஒரு பிள்ளையின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து  கிளிநொச்சி குற்ற தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.