தேசிய அணியில் திறமையான கிழக்கு வீரர்கள் விளையாட வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்

விளையாட்டு உலகம் எங்கயோ போய்க்கொண்டிருக்கின்றது இன்று இந்தியன் பிரீமியர் லீக் என்றும் ஸ்ரீலங்கா பிரீமியர் லீக் என்றும் நடத்தப்பட்டு திறமைகள் அடையாளம் காணப்பட்டு அதிகளவான வீரர்கள் தேசிய அணிக்குள் உள்வாங்கப்படுகின்ற போது கிழக்கில் இன்னமும் மென்பந்தில் விளையாடிக் கொண்டிருக்கிறோம். இன்னும் எத்தனை நாட்களுக்கு நாம் மென்பந்தில் கிரிக்கட் விளையாடுவதுஇ இது ஒருவேதனையான விடயமாகும். இன்னும் 10 வருடத்திலாவது எமது பிள்ளைகள் மென்பந்தில் உள்ள தேர்ச்சி இருக்கத்தக்கதாக கடினபந்திலும் அதியுச்ச தேர்ச்சி பெற்று தேசிய அணியில் விளையாடுவதற்கான ஆரம்ப ஏற்பாடுகளை செய்து கொண்டு வருகின்றோம். இன்னும் குறிப்பிட்ட நாட்களுக்குள் கடின பந்துக்கான பயிற்சிக் கூடாரத்தினை விளையாட்டு வீரர்களுக்கு கையளிக்கவுள்ளோம் என அக்கரைப்பற்று அனைத்துப்பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவரும், கிழக்கின் கேடயம் பிரதானியுமான எஸ்.எம். சபீஸ் தெரிவித்தார்.

பெருந்தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்களின் ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு பாலமுனை மெரூன் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரவுநேர மென்பந்து சுற்றுப்போட்டிகளின் இறுதிநாள் போட்டிகளுக்கு கௌரவ அதிதியாக கலந்து கொண்டிருந்த போதே அவர் ஊடகங்களுக்கு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்