ரிஷாட் பதியூதீன் குறித்த அசாத் மௌலானாவின் குரல் பதிவு : பகிரங்கப்படுத்திய பிள்ளையான்

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.

சனல் 4 தொலைக்காட்சியில் ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆவணப் படமொன்று வெளியிடப்பட்ட நிலையில் எதிர்கட்சியினால் சபை ஒத்திவைத்து வேளை விவாதத்துக்கான பிரேரணை கொண்டு வரப்பட்டது.

இதன்போது இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரக்காந்தன், குறித்த ஆவணப் படத்தின் தகவலாளரான அசாத் மௌலானா தமக்கு அனுப்பிய குரல் பதிவொன்றை சபையில் ஒலிபரப்பச் செய்தார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட ரிஷாட் பதியூதீன் குறித்த குரல் பதிவில், முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானது என தெரிவித்தார்.

இதேவேளை, ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் உள்ளதாக கூறும் இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துரை சந்திரக்காந்தன்  அதனை உறுதிப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.