சொந்த மகளை வன்புணர்விற்குட்படுத்திய தந்தையை கைது செய்ய உதவி கோரும் பொலிஸார்

கண்டி மாவத்தேகம பகுதியில் சொந்த மகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

கண்டி மாவத்தேகம பகுதியில் வசிக்கும் குறித்த சந்தேக நபர் தனது 09 வயது மகளை கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.

சம்பவம் தொடர்பில்  பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில் சிறுமியின் தந்தை அப்பகுதியிலிருந்து தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

942913940எ என்ற தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்குரிய கிஹான் தனுஷ்க்க (வயது 29) என்பவரே சந்தேக நபராவார்.

இவர் தொடர்பில் தகவல் அறிந்தால் உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸர் கேட்டுக்கொண்டுள்ளனர்.