சட்டவிரோதமாக தங்கம் கொண்டுவர முயன்றவர் கைது

டுபாயிலிருந்து ஒருகோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க பாளங்களை சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவர முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் காலி பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் என்பதுடன்,  அவரது பயணப்பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 616 கிராம் நிறையுடடைய 5 தங்க பாளங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.