
அரச ஊழியர்களுக்கான விசேட சுற்றுநிருபம் வெளியீடு
அரச ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட கொடுப்பனவுகளை வழங்கும் புதிய திகதியை அறிவித்து சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு முதல் அமுலாகும் வகையில் புதிய திகதியை அறிவித்து நிதி அமைச்சின் திறைசேரி செயற்பாட்டு பிரிவு சுற்றுநிருபத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளம், சம்பளமுற்பணம், வழங்கும் புதிய திகதியும், முப்படையினர் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம் வழங்கும் புதிய திகதியும் ஓய்வூதியம் வழங்கும் திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளன.

