மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மழைக்கான சாத்தியம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று  வியாழக்கிழமை பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது , என மட்டக்களப்பு மாவட்ட வானிலை அவதான நிலைய ஓய்வுபெற்ற சிரேஷ்ட பொறுப்பதிகாரி கே.சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிற்பகல் வேளையில் மழை பெய்கின்ற இக் காலநிலையானது சில நாட்களுக்கு காணப்படும் சாத்தியம்  உள்ளது.

இதேவேளை அம்பாறை, திருகோணமலை,  முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று முதல் சில நாட்களுக்கு பிற்பகல் அல்லது மாலை வேளைகளில் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறு காணப்படுகின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.