பயணப்பொதியில் மீட்கப்பட்ட சடலம் : சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி 24 இலட்சம் ரூபாவை மோசடி செய்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் நேற்று புதன்கிழமை நீர்கொழும்பு பிரதான நீதவான் அமில ஆரியசேன முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டனர்.

இதன்போது,  சந்தேகநபர்களை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

கொலை செய்யப்பட்டவரின் சடலத்தை சீதுவ தண்டுகம ஓயா பகுதியில் பயணப் பையில் வைத்து வீசிச் சென்ற சம்பவம் தொடர்பில் குறித்த ஆறு பேரும் கைது செய்யப்பட்டனர்.