
கற்றலில் பின்னடைவு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்ட பல்கலைக்கழக மாணவி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்று வந்த கிளிநொச்சியை சேர்ந்த மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் டீலக்ஸ் (22 வயது) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ம் தேதி மதியம் அவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்ததை அவரது சகோதரர் பார்த்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழகத்தில் தனது மகளுக்கு ஆங்கிலத்தில் கற்பிக்கப்படுவதால் அவருக்கு கற்றல் மிகவும் கடினமாக இருந்ததாகவும் அதன் காரணமாக மீண்டும் பல்கலைக்கழகத்திற்கு செல்ல முடியாது என தனது மகள் தெரிவித்ததாகவும் உயிரிழந்த மாணவியின் தாயார் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
